ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை - டாக்டர் கௌதமன்

Friday, August 18, 2017

வெரிகோஸ் வெயின்ஸ்

சமூக வாழ்வில் ஒவ்வொருவரும் வெவ்வேறு சூழல்களில் மாறுபட்ட பல பணிகளை பார்க்க வேண்டியிருக்கிறது. நம் பணிக்கு ஏற்ப அமர்ந்தோ, நின்றுகொண்டோ அல்லது நடந்துகொண்டே பார்க்கும் பணிகளே ஏராளம். இதில் அதிக நேரம் நிற்கும் பணியாளருக்கு மட்டுமில்லை.

நமது இல்லங்களில் கிச்சனில் நின்றுகொண்டு இருக்கும் பெண்களையும் தாக்கும் நோய்  ‘வெரிகோஸ் வெயின்ஸ்’. இந்நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன். 
  
வெரிகோஸ் வெயின்ஸ் என்பது நரம்பு முடிச்சு நோய். மனித உடலில், இரண்டு வகையான இரத்தக் குழாய் உள்ளது. நல்ல இரத்தத்தை எடுத்துச் செல்வதை ஆர்டெரிஸ் என்றும்,  உடலிலுள்ள எல்லா பாகங்களிலும் இருக்கக் கூடிய கெட்ட இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லக்கூடியது வெயின்ஸ் என்றும் கூறுவர் . 

கால் மூட்டுக்கு பின்புறம் உள்ள நரம்பு மண்டலமானது, சற்று வலுவிழந்தால், அந்தப் பகுதியில், பின்னங்காலில் உள்ள நரம்புகள் பச்சை கோடாக வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். இதனையே ‘வெரிகோஸ் வெயின்’ என்று கூறுகிறோம். நரம்பு மண்டலம் தொய்வடைந்ததால், வால்வின் வழியே செல்லக் கூடிய கெட்ட இரத்தம் தடை படும். இதனால், இரத்தம் கட்டியாக உறைந்து மாரடைப்பு வரக் கூடிய  சத்தியம் அதிகம். எனவே, கால்களில் ஏற்படக்கூடிய சிறிய பிரச்சினை தானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. இதற்கு  தீர்வுதான் என்ன? என்று கேட்பவர்களுக்கு, ஆயுர்வேதத்தில் சில எளிய தீர்வுகளை நாங்கள் பரிந்துரைக்க முடியும்.

முதலில் வெரிகோஸ் வெயின் நோயாளிகளை நாங்கள் ஐந்து நிலைகளில் பிரிக்கிறோம்.  

 • கால்தொடை பகுதிகளில், மெல்லிய வெளிர்பச்சைக் கோடு போலவோ அல்லது சிலந்தி வலை பின்னல் போலவோ நரம்புகள் காணப்படும். இந்நிலையில் அதிகமாக வலியோ எரிச்சலோ ஏற்பட வாய்ப்பு இல்லை இது முதல் நிலை ஆகும். 
 • இரண்டாவது நிலையில், வெளிர் பச்சை நிறமாக இருந்த நரம்பு மண்டலம், அடர் பச்சையாகவோ அல்லது கரும் பச்சையாகவோ நிறம் மாறும். இப்பொழுது, அந்நோயாளிகளுக்கு சற்று வேதனை தெரிய ஆரம்பிக்கும். 
 • தொண்ணூறு சதவீதம் நோயாளிகள், மூன்றாவது நிலை வந்த பின்புதான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஒரு நூலை இழுத்து முடிச்சு போட்டு வைத்தால் எப்படி இருக்குமோ, நோயாளிகளின் கால்களும் அப்படிதான் நரம்பை இழுத்து முடிந்ததுபோல்  இருக்கும். அதனால் இரத்தக் குழாய் வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கும். தூக்கத்தில் தெரியாமல் கால்களை சொறிந்தால் கூட, இரத்தம் வெளியாகும்.
 • நான்காம் நிலையில், மூட்டுக்கு கீழ் இருக்கக் கூடிய தசைகளில் உள்ள அனைத்து இரத்தக் குழாயும் வெளி வந்துவிடும். அரிப்பு அதிகமாக இருக்கும், காலையில் கால்களில் வீக்கம் இல்லாமல்  இருக்கும். மாலை முடிவதற்குள் கால்களில் வீக்கம், மிகுந்து அவர்கள் செருப்புகளே, அவர்களுக்கு பொருந்தாத நிலையில் இருக்கும். .
 • கால்களில், கொப்புளங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அதாவது வெரிகோஸ் வெயின்ஸ் என்பது வெரிகோஸ் அல்சராக மாறும்.  

சிகிச்சை :
  
வெரிகோஸ் வெயினை குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவ முறைப்படி  நாங்கள் பஞ்சகர்ம சிகிச்சை அளிக்கிறோம்.  

அட்டை பூச்சி பஞ்சகர்ம சிகிச்சை : 

 • மருந்துக்காக, உபயோகப் படுத்தும் அட்டைப் பூச்சிகளை வெரிகோஸ் வெயின் பாதித்த இடங்களில் இடுவோம். அட்டைப் பூச்சியானது கெட்ட இரத்தத்தை எளிதில் உறிஞ்சி விடும். சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நோயாளிகள் செய்ய வேண்டியவை: 

 • அதிகம் காரமுள்ள உணவுகளை தவிருங்கள்.
 • தயிர் சாப்பிடுவதை தவிருங்கள்.
 • அசைவ உணவுகள் அதிகமாக உண்பதை நிறுத்துங்கள்.
 • கட்டாயம் தினம் மூன்று லிட்டர் தண்ணீரையாவது பருகுங்கள்.
 • ஆல்கலின் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்க்கத் தொடங்குங்கள்.
 • தரையில் கால்களை நீட்டி அமருங்கள்.
 • உடற்பயிற்சி செய்தல் மிக அவசியம்.
 • குறைந்தது 15 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தொடர் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டால், வெரிகோஸ் வெயின் நோயிலிருந்து எளிதில் வெளிவரலாம்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles