எதிர்ப்புசக்தி அவசியம்!

Monday, September 19, 2016

அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, உலகத்தைத் தானே ஆண்டுகொண்டிருப்பதாக நினைத்து மமதையோடுதான் திரிகிறான் மனிதன். எல்லாவற்றுக்கும் மேலான இயற்கை இருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாகவே, இதனைப் பற்றிய பிரக்ஞை மனித குலத்திடம் இல்லை. அதனை வெல்ல யாராலும் முடியாது என்பதும் நமக்குப் புரிவதில்லை.

இயற்கை சீற்றம், வானிலை மாற்றங்கள் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதால், புதிதாகப் பல நோய்கள் நம்மைப் பாதிக்கின்றன. இந்த நோய்களைப் பற்றி ஆராய்ந்து, தீர்வை தெரிந்து கொள்வதற்குள் வேறுவிதமான வைரஸ்கள் நம்மைத் தாக்கப் படையெடுக்கிறது. இந்த வைரஸ் உண்டாவதை வேண்டுமானால், நம்மால் தடுக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், நம்முள் இருக்கும் நோய் எதிர்ப்புதிறனை அதிகரித்துக் கொள்ளலாமே இப்படி.

  • இளங்காலை நேர நடைப்பயிற்சி 
  • யோகா 
  • தேநீர், காபி போன்ற பானங்களைத் தவிர்த்தல்
  • இரசாயனம் கலக்காத சுகமான குளியல்
  • மதிய சாப்பாட்டில் அரிசியைக் குறைத்து, கூட்டு, பொரியல், துவையல் சேர்த்துச் சாப்பிடுவது
  • தினமும் கொய்யா உண்பது
  • சிலர் வெள்ளித் தட்டிலோ, வெள்ளிக் கிண்ணத்திலோ சாப்பிடுவர். காரணம், வெள்ளி நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டும்
  • வெள்ளிப் பாத்திரத்தில் சாப்பிட முடியாதவர்கள், மண் பாத்திரத்தில் சமைத்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புத்திறன் உயரும்.
  • குறைந்த பட்சம் 7 மணி நேர உறக்கம் அவசியம்

இந்த அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். நோய் எதிர்ப்புச்சக்தியை வளர்த்துக்கொண்டு, ஓரளவுக்கு உங்களைத் தற்காத்துக் கொள்ளலாம். 

- பவித்ரா
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles