வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் கொய்யா!

Wednesday, September 7, 2016

சென்னையில வைரஸோட தாக்கம் ரொம்ப அதிகரிச்சுடுச்சு. எங்க திரும்பினாலும் யாரைக் கேட்டாலும், ‘என்னை அஞ்சு நாள்’ டிஸ்டர்ப் பண்ணாதீங்க. எனக்கு வைரல் பீவர்’ என்கிற பேச்சுகளைத்தான் அதிகம் கேட்கிறோம். இது போன்ற தட்பவெப்ப மாற்றங்களை, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. வைரஸ்களை அழிக்கும் சக்தி நம்மிடம் இல்லை. ஆனால் இதுபோன்ற ஜுரம் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா? இப்படி..

தினம் ஒரு கொய்யாப்பழம் எடுத்துக் கொண்டால் போதும். வெகுவான நோய்கள், நம்மைத் தாக்காமல் இருக்கும். கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துகள் ஒளிந்திருக்கிறது. இது நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. இதன் பயன்கள் என்னவென்று பார்க்கலாமா..

  • இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்  பசியை அதிகரிக்கும்
  • குடலைச் சுத்தப்படுத்தி, மலச்சிக்கலை நீக்கும்
  • இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும்     
  • நீரழிவு நோயாளிகளும் கூட, இதனைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்
  • கேன்சர் நோய் வரவிடாமல் தடுக்கும்
  • தைராய்டு, ஹார்மோன் பிரச்சினைகளுக்கு உகந்த தீர்வளிக்கும்
  • தினமும் கொய்யாப்பழத்தை உட்கொள்வதால், தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும்
  • உடல் பருமனை குறைக்க உதவும்

இத்தனை பயன்களைத் தரும், எளிமையாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் கொய்யாப்பழத்தை உண்டு, நீங்களும் பயன்பெறலாமே!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles