சுகப்பிரசவத்திற்கு உதவும் ஆடாதோடை!

Tuesday, October 4, 2016

மனிதர்களின் உதவியின்றி வளரும் மூலிகைகளில் ஆடாதோடையும் ஒன்று. நமது சுயநலத்தின் உச்சபட்சமாக, காடுகளையும் நீர்நிலைகளையும் அழித்ததன் பலனாக, தானே வளரும் மூலிகைகளை இழந்திருக்கிறோம். இந்த நிகழ்வு முடியவில்லை, மிகவும் மோசமான விளிம்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

 

 

பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்ட, மரத்தை விடுத்து குளிர்சாதனப் பெட்டிகளைத் தேடும் பரிதாப நிலை. தானே வளரும் செடிகள் துளிர்க்க வேண்டிய இடத்தில் இறுகிப்போயிருக்கும் சிமெண்ட் பூச்சு. இந்த வருத்தம் பெருகக் காரணமிருக்கிறது. அப்படித் தானே வளரும் மூலிகைகளில் வெகு சில மட்டுமே வேர், தண்டு, இலை, கனி, பூ என்று எல்லா பாகங்களும் பலன் தரும். அனைத்துமே, நம் துயர் போக்கும் மருத்துவ குணங்களோடு இருக்கும். அந்த வகையைச் சேர்ந்ததுதான் ஆடாதோடை. 

 

வாத, பித்த மற்றும் கபத்தினால் ஏற்படும் நோய்களுக்கு ஒரு எளிய தீர்வு ஆடாதோடை. மிகுரத்த அழுத்தம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு, ஆடாதோடை ஒரு அருமருந்து. இதன் இலைச்சாறு 10-20 துளிகள் எடுத்துக்கொண்டு, அதனுடன் தேன் கலந்து உண்டு வந்தால் போதும். நாளடைவில் ’பிரஷர்’ கண்டரோலுக்கு வரும். 

 

தட்ப வெப்ப மாற்றம், ஒவ்வாமை மற்றும் தொற்றினால் ஏற்படும் சளி, இருமல், சுரம், இளைப்பைப் போக்கவல்லது ஆடாதோடை. இதன் இலையை காம்பு நீக்கி, நீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆடாதோடை கசாயம் தயார். 

 

அதேபோல, பேறுகாலத்தின் இறுதியில் இருக்கும் பெண்கள் ஆடாதோடை வேர்க் குடிநீரைத் தினமும் 60 மி.லி. குடிக்க வேண்டும். இவ்வாறு காலை, மாலை இருவேளையும் உண்டு வர, அவர்களுக்கு சுகப் பிரசவம் வாய்க்கும். ஆடாதோடை மூலிகையைப் பயன்படுத்துவதால் நாம் பெரும் பயன்களில், வெகு சில மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது. 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles