சமையலறையில் பியூட்டி பார்லர்! 

Friday, November 18, 2016

இயற்கையாகவே உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் அழகோடுதான் படைக்கப்பட்டிருக்கின்றன. உடல் மற்றும் மனதின் ஆரோக்கியமே உண்மையான அழகு. சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதால், நம்மில் பலருக்கு தோல் நோய்கள் ஏற்படுவதும், முகப் பொலிவிழந்து போவதும் அதிகரித்து வருகிறது. அதைச் சரிசெய்ய, அதிக கரன்சிகளை பார்லர்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும்; நமது சமையலறையிலேயே சரிசெய்து கொள்ளலாம்.    

அதற்கான சில டிப்ஸ்;

  • முல்தானி மெட்டியை பசும்பாலில் கலந்து முகத்தில் பூசி வந்தால், முகப்பரு எளிதாக மறையும். 
  • பாசிப்பயிறு மற்றும் சந்தனத்தைச் சேர்த்து பூசி வர, முகத்தில் தோன்றும் கரும்புள்ளி காணாமல் போகும்.
  • சம அளவில் பால் மற்றும் அரிசிமாவு சேர்த்து, முகத்தில் பூச வேண்டும். அது நன்றாக உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் எளிதில் முகச்சுருக்கங்கள் மறையும்.
  • பனிக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகளைக் குணப்படுத்த, சோற்றுக் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயை அதன்மீது தேய்த்தால் போதும். 
  • நன்கு பழுத்த பப்பாளிப் பழத்துடன் பால் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரால் கழுவினால் போதும். முகம் பொலிவோடு  இருக்கும்; மாய்ஸ்ட்ரைசர் தேவையில்லை.

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles