கொஞ்சம் மழையைக் கவனிங்க பாஸ்..!

Wednesday, August 31, 2016

மழையையும் பொண்ணுங்களையும், சில பேர் ஒண்ணா ஒப்பிடுவாங்க. காரணம் ரொம்ப சிம்பிள். பொண்ணுங்க எதுக்கு சிரிப்பாங்க, எதுக்கு கோபப்படுவாங்கன்னு யாருக்கும் தெரியாது. அதேமாதிரி எப்போ மழை எப்போ பெய்யும், எப்போ பெய்யாதுன்னு கணிக்கவே முடியாது. ’கிளைமேட் ரொமான்டிக்கா இருக்கேன்’னு எங்கேயாவது வெளியே போயிட்டு வர பிளான் பண்ணுவோம். அப்போதான், மழை பிச்சு உதறும். குடும்பத்துல எல்லார்கிட்டயும், ரொம்ப வீராப்போட சொல்லியிருப்போம். நம்ம தலை தானா கவுந்துடும். “இன்னிக்கி உங்களை பீச்சுக்கு கூட்டிட்டுப் போலாம்னு இருந்தேன்.

ஆனால் பயங்கர மழை வரும் போல இருக்கு. வீட்டுலயே இருந்துடலாம்”னு சொல்லிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போடப்போவோம். அந்த கேப்ல வெயில் சுட்டெரிக்கும். இந்த மாதிரி அனுபவங்கள், நம்ம எல்லாருக்குமே இருக்கும். 

அதனால, கிளைமேட்டை வச்சு பிளான் பண்றதை நிறுத்துங்க. மழையால ஏற்படுற நோய்களை அனுமானிச்சு, அதுக்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுங்க. அந்த நடவடிக்கைகள் என்னன்னு பார்க்கலாமா!

  • முதல்ல காபி, டீக்கு பதிலாக, சுக்கு-மல்லி கஷாயம் குடிங்க.
  • இனிப்பை சுத்தமா தவிர்த்திடுங்க. 
  • நிறையா பால் குடிப்பவராக இருந்தால், அதில் மிளகு, மஞ்சள் பொடி சேர்த்துக்கோங்க. 
  • குடும்பத்துல இருக்குற எல்லாரையும், நிலவேம்பு குடிநீரை குடிக்கச் சொல்லுங்க.
  • உடலுக்கு வெம்மை தரும் உணவுகளை சேர்த்துக்கோங்க. 
  • செரிமானத் தொந்தரவுகள் இருந்தால், எண்ணெய் பதார்த்தங்களைத் திரும்பிக்கூடப் பார்க்காதீங்க. 
  • வெளியே எங்கேயாவது போறதா இருந்தா, காதுகளை நல்லா ‘கவர்’ பண்ணிகிட்டுப் போங்க. 

இதை ‘பாலோ’ பண்ணுங்க. மழை காலத்துல வர்ற நோய்களுக்கு ’நோ’ சொல்லுங்க..!

-பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles