அலோவேராவும் அதன் நன்மைகளும்!

Friday, August 26, 2016

இயற்கையிலேயோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினாலோ வரும் நோய்களுக்கு, இயற்கையிலேயே மருந்துகள் இருக்கின்றன. அதற்காகத் தனியாக உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இருப்பதைச் சீரழித்துவிட்டு நாம் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

நகர்புறங்களிலோ அல்லது கிராமங்களிலோ, சில வீடுகள் மற்றும் கடைகளில் கண் திருஷ்டிக்காகக் கற்றாழை கொத்தை தொங்க விட்டிருப்பார்கள். இது, சில கிருமிகளை வீட்டில் அண்ட விடாது என்று கூறுவர். வெப்ப மண்டலப் பகுதியில் விளையும் தாவரங்களில் ஒன்றான ‘சோற்றுக் கற்றாழை’ யில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிரம்பியிருக்கின்றன. இதனை, நம் வீடுகளில் எளிமையாக வளர்க்கலாம்.

‘ஜெல்’ வடிவில் இருக்கும் கற்றாழையை உள்ளுக்கும் மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம். இதனை ஆங்கிலத்தில் ‘அலோவேரா’  என்று குறிப்பிடுவர்.

 

அலோவேராவின் ஆறு அற்புதங்கள் 

  • ஷாம்புவிற்குப் பதிலாக, கற்றாழையைத் தலைக்கு தேய்த்து, சிறுது நேரம் ஊறவைத்து, அதன்பின் குளித்து வந்தால், பொடுகு இருந்த இடம் தெரியாமல் போகும்.
  • சிறு காயங்கள், சரும நோய்கள் ஏற்பட்ட இடங்களில், இதனைத் தடவலாம். அதன்பின், காயங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.  சருமத்திற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • கோடை நாட்களில் அடிக்கடி பூசி வந்தால், சூரிய வெப்பத்திலிருந்து  நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கு, கற்றாழை ஒரு தீர்வு. 
  • முக்கியமாக, பெண்கள் கற்றாழை ஜெல்லை நன்றாக அலசிச் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் பிரச்சினைகள்  சீராக வாய்ப்புள்ளது.
  • உடல் பருமனுக்கும் கற்றாழை ஒரு எளிய தீர்வு.

கற்றாழையை வீட்டில் வளர்த்தால் போதும், வேறு மூலிகைகளைத் தேடி காட்டிற்குச் செல்ல வேண்டிய தேவை இருக்காது. 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles