இலந்தைப் பழம்னா சும்மா இல்லை..! 

Friday, August 19, 2016

நம்முடைய உடலைப் பத்திரமாக வைத்துக்கொள்வது என்பது, நம் கையில்தான் இருக்கிறது. சரியான இடைவெளியில், அளவான உணவுகளை உட்கொண்டாலே போதும். பலவிதமான நோய்களிலிருந்து, நம்மை காத்துக் கொள்ளலாம்.

இதன் ஒரு பகுதியாக, அதிகமான நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, நாம் பழங்களை உட்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். இயற்கையாக பூமியில் விளையும் பொருட்கள், நமக்கு என்றும் கேடு விளைவிக்காது.  

இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த பழங்களில் ஒன்று இலந்தை. இந்தப் பழத்தில், வைட்டமின் சி அபாரமாக உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இயற்கையிலேயே, இலந்தைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம். இதனால், இலந்தை மிகு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் கூறுவர். செரித்தல் கோளாறு, ரத்த சோகை, உடல் சோர்வு போன்ற பல அசௌகரியங்களை அகற்ற உதவுகிறது இலந்தைப் பழம்.

இதனைத் தெரிந்துகொண்ட பிறகாவது, ‘இலந்தைப் பழம், இலந்தைப் பழம்’ என்று கிண்டலாகப் பாடுவதை கைவிடுவோம். உடலுக்கு தீங்கு விளைவுக்கும் நொறுக்குத்தீனிகளை ஒதுக்கிவிட்டு, இனி இலந்தைப்பழம் வாங்கி சாப்பிடுவோமா!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles