பொடுகு தொல்லையிலிருந்து தப்பிக்க.. 

Wednesday, August 17, 2016

இரசாயனம் கலக்காத வாழ்க்கை, நல்ல ரசனையோடு வாழ வழி செய்யும். இதைத்தான், சமீபமாக நாம் உணர்ந்துக் கொண்டிருக்கிறோம். அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. பறவைகள் குடிகொள்ளும் வீடான  அரசமரங்களும் வேப்பமரங்களும் இருந்த இடங்களில், இப்பொழுது செல்பேசி டவரும் மின்சாரக் கம்பங்களும் நிறைந்துவிட்டன. செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகளை இழந்துவிட்டோம்.

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுமே, இப்பொழுது மன அழுத்தங்களுக்கு நடுவில்தான். மனிதனின் பேராசையே, அவனது வாழ்க்கையைச் சூறையாடி விட்டது. நாள் முழுவதும் அலுவலங்களில் சுழன்றுவிட்டு, கடைசியில் நாம் சம்பாதிப்பது என்னவோ,  மனச்சோர்வும் புதுப்புது நோய்களும்தான். மருந்து கலந்த உணவை, நாம் உட்கொண்டுவிடுகிறோம். அது நம்முடைய உடம்பில் விஷமாக மாறிவிடுகிறது. பின் அதனை முறியடிக்க, மருத்துவரிடம் சென்று வேறொரு மருந்தை உட்கொள்கிறோம். உணவே மருந்தாக இருக்கும் வாழ்க்கை மாறி, இப்பொழுது மருந்தே உணவாக மாறிக்கொண்டிருக்கிற அவலநிலை. 

 

மனஅழுத்தங்களால் உருவாகும் நோய்களில் ஒன்று பொடுகுத்தொல்லை. நாம் பணியாற்றும் அலுவலகத்தில் ஏசி நீக்கமற நிறைந்திருந்தால், பொடுகு பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது. பொடுகு என்பது தலையின் சருமத்தில் உள்ள இறந்த செல்கள்தான்.

 

பொடுகை ஒழிக்க, வேப்பெண்ணெய் ஒரு எளிய தீர்வு.  வேப்பெண்ணெயைத் தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்துவந்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். இதனால், உங்கள் தலைமுடி வேகமாக நரைக்காது. பேன் தொல்லை அண்டாமல் இருக்கும். 

 

வாழ்க்கையை லேசாக எடுத்துக்கொள்ளும் மனநிலை வாய்த்தால் போதும். பொடுகுத்தொல்லை மட்டுமல்ல, எதிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles