தெலுங்கில் பேயாக நடிக்கும் தன்ஷிகா!

Wednesday, March 28, 2018

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் படம் ‘மேளா’. இப்படத்தில் இரு பரிமாணங்களில் நடிக்கிறார் தன்ஷிகா. அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடித்துள்ளார். படத்தில் தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், ஆலி, பரத்ரெட்டி, முனிஸ்காந்த், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

படத்தில் நடித்துள்ளது பற்றி தன்ஷிகா கூறும்போது, 

“நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம் ‘மேளா’.  கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ, அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கிரண். அவர் என்னைச் சந்தித்து, உங்களை மனதில் வைத்து ‘மேளா’ என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் என்றார். இந்த கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது கதையின் நாயகியை மையப்படுத்திய திரைக்கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு முழு கதையையும் சொன்னார். அதை கேட்டுவிட்டு நான் பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன். அந்தளவிற்கு அந்த கதை என்னை கவர்ந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.’ என்றார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது! 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles