பாலிவுட்டுக்கு போகும் "பியார் பிரேமா காதல்"

Wednesday, March 28, 2018

யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே புரொடக்ஷன் ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். படத்தை இலன் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் மாற்று மொழி  உரிமையை வாங்க பெரும் போட்டா போட்டி நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் ஹிந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது. 

இது குறித்து இயக்குநர் பேசும்போது, 

“காதலுக்கு மொழி அவசியமில்லை.  காதலை பற்றிய படங்களுக்கும்  மொழி அவசியமில்லை. " ஹை ஆன் லவ்" என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து, சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் ஆனதின் பிரதிபலன் இது. இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதால், ஹிந்தி ஆக்கத்தை பற்றிய விவரங்கள் தெரிவிப்பதற்கு இன்னமும் அவகாசம் தேவை" என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles