சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது!

Wednesday, March 28, 2018

இயக்குனராகும் கனவில் இருந்த அருண்ராஜா காமராஜ், பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட  சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தயாரித்து இருப்பது மிக பொருத்தமானது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 

படம் குறித்து அருண்ராஜா காமராஜ் பேசும்போது, 

"இது எனக்கு மிகவும் நெருக்கமான படம், ஏனென்றால் அது வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படிப்பட்டவை. சத்யராஜ் சார், இளவரசு சார், ரமா மேடம், முனீஸ்காந்த், அறிமுக நடிகர் தர்ஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து இருக்கிறேன். அடுத்தகட்ட படப்பிடிப்பில் தான் கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதற்காக நடிகைகளும், கிரிக்கெட் ஆடும் பெண்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மிகவும் சவாலாக இருக்கும் அந்த படப்பிடிப்புக்காக காத்திருக்கிறோம்!” என்றார்.

பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பும், லால்குடி இளையராஜா கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles