ப்ரிதிவிராஜுடன் கைகோர்த்த ரஹ்மான் !

Thursday, March 22, 2018

நடிகர் ரஹ்மான் தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர் போனவர். அவர் நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. முக்கியமாக அவர் கதாநாயகனாக நடித்த ‘துருவங்கள் பதினாறு’ படம் தமிழ், மலையாளம் என நல்ல வெற்றியை பெற்றது.

தற்போது அவர் நடிகர் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ரணம்’ படத்தில் நடித்துள்ளார். இஷா தல்வார் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை நிர்மல் சஹாதேவ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று, யூ&டியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது. படத்தில் ரஹ்மான், தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பில்  ‘தாமோதரின் லா ஆஃப் சர்வைவல்’ என்ற டீசர் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles