‘அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ காமெடி கலாட்டா’!

Tuesday, March 20, 2018

ஆரூரா சினிமாஸ் தயாரித்துள்ள படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'. இப்படத்தில் 'ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் 'குக்கூ' புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், 'மொட்ட' ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவினாஷ் ஹரிஹரன் இயக்கியுள்ள இப்படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். 

இப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது,

“ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில், கொடுத்த பட்ஜெட்டில் முடித்து கொடுப்பதே ஒரு இயக்குநரின் முதல் சவாலாகும். இதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். என் மீது  நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்த தயாரிப்பாளர் காவியா மகேஷ்  அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் நிச்சயம் ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும்!” என்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles