என் வாழ்வின் சிறந்த படம் ‘கண்ணே கலைமானே’ - நடிகை தமன்னா 

Tuesday, March 20, 2018

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களின் மூலம் சிறப்பு கவனம் பெறுபவர் சீனு ராமசாமி. அவரின் இயக்கத்தில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே.’ இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா , கவி பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுக்கும் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு இசை தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்திற்கான தனது படப்பிடிப்பினை சமீபத்தில் முடித்தார் தமன்னா.

இது குறித்து தமன்னா பேசுகையில், 

“நிறைய பேசாமலேயே நடிகர்களுக்கு அவர்களது கதாபாத்திரத்தையும், தனக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக விளக்கி, வேலை வாங்குபவர்  இயக்குநர் சீனு ராமசாமி. 'தர்மதுரை' படத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும் பணிபுரியவேண்டும் என ஆவலோடு இருந்தேன். எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் 'கண்ணே கலைமானே' நிச்சயம் ஒன்றாக இருக்கும். இந்த படத்தில் உதயநிதி அவர்களின் கதாபாத்திரத்தையும் நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். 'கண்ணே கலைமானே' படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்!'' என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles