‘அட்டு’ பட இயக்குநரின் அடுத்த படம் 'டைசன்'

Tuesday, March 13, 2018

ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே. சுரேஷ் தயாரித்து, நடிக்க உள்ள படம் 'டைசன்'. இப்படத்தை 'அட்டு' படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இயக்க உள்ளார். பிரமாண்டபொருட்செலவில் இப்படம் வளர்கிறது.

'பில்லாபாண்டி ', 'வேட்டைநாய்' போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ், இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் இப்படத்தில் 'அஃகு' படத்தின் நாயகன் அஜய் இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles