‘பூமராங்’ படத்தின் பாடலுக்காக ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்ட செட்!

Tuesday, March 13, 2018

'மசாலா பிக்ஸ்' நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கி வரும் படம் ‘பூமராங்’. அதர்வா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகி வருகின்றது. படத்தின் ஒரு பாடலுக்காக கலை இயக்குனர் ஷிவா யாதவ், ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார். 

இது குறித்து இயக்குனர் ஆர். கண்ணன் பேசும்போது,  

“ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தை கொண்ட   ஆக்ஷன் படம் தான் 'பூமராங்'. இப்படத்தில் தேசப்பற்று பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடலிற்காக முற்றிலும் வித்யாசமான செட் அமைக்கலாம் என்பதற்காக ஒரு மிக பிரம்மாண்ட செட்டை அமைத்தோம். இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் எனது இந்த கனவை அழகாக புரிந்துகொண்டு நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான பாடலை தந்துள்ளனர். 

கலை இயக்குனர் ஷிவா யாதவின் பிரம்மாண்டமான செட்டும் பிருந்தா அவர்களின் அசத்தலான நடன இயக்கத்திலும் இந்த பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது. சுமார் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் நமது சினிமா துறையின் சிறந்த 100 நடன கலைஞர்கள் இந்த பாடலில் உள்ளனர். திட்டமிட்டபடியே செயல் புரிந்ததால் படப்புடிப்பு  மிக வேகமாகவும் அருமையாகவும்  நடந்து வருகிறது!” என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles