தமிழில் களமிறங்குகிறார் விஜய் தேவரகொண்டா!

Wednesday, March 7, 2018

2017 ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியாகி, பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் ‘ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்’ சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆனந்த் சங்கர். 

‘அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு, கிளாப் அடித்து, படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்ஸாதா, நாசர், சத்யராஜ், எம்.எஸ். பாஸ்கர் என பலர் நடிக்கிறார்கள். இதில் நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா தமிழில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்திற்கு சாந்தா ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் அவர்களின் மகன் ஆவார்.  இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles