விமலுக்கு இனி கவலை இல்லை..!

Friday, March 2, 2018

கடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி, வசூல் வேட்டை நடத்தியது. படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விமலும், படத்தை இயக்கிய பூபதி பாண்டியனும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும் இதன் பின்னணியில்  முக்கிய தூணாக இருந்து வருபவர் தான் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்கார வேலன்.  

 

 

 

குறிப்பாக ‘மன்னர் வகையறா’ பட ரிலீசின் போது விமலின் ‘ஜன்னலோரம்’ பட இழப்பீடு விவகாரம் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுத்து எந்தவித சிக்கலுமின்றி ‘மன்னர் வகையறா’ வெளிவர உதவினார் இவர். அடுத்ததாக விமலின் நடிப்பில் தயாராகிவரும் ‘கன்னிராசி’ படத்தை வெளியிடும் உரிமையையும் சிங்காரவேலனே வாங்கியுள்ளார். படம் மார்ச் மாதம் வெளியாகிறது. 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles