மினிமம் பட்ஜெட் படங்களுக்கு உதவும் புதிய பட நிறுவனம்!

Monday, January 29, 2018

“ஹெச் 3 சினிமாஸ்” நிறுவனம் சார்பில் கஸாலி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘மனுசனா நீ’. இந்தப் படம், மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய ஒரு துறையில், பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றிப் பேசும்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கூறும்போது, 

 

“எனது முதல் படம் இது. எதிர்பார்த்ததை விட ரொம்ப திருப்தியாக வந்திருக்கிறது. அந்த வகையில் ஒரு இயக்குநராக நான் சந்தோஷப்படுகிறேன். இந்தப் படம் வெளியான உடனேயே எனது அடுத்த படத்திற்கான வேலைகளும், சிறு படங்களை வெளியிடும் முயற்சிகளையும் தொடங்குவேன்!” என்றார். 

 

துபாயில் வியாபாரம் செய்பவர் கஸாலி. சினிமா மீதான காதலால் தனது முதல் திரைப்படத்தை இயக்கும்போது பலவிதமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்தார். தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் படங்களை விட, வெளியாகாமல் போகிற படங்கள் பல மடங்கு இருக்கின்றன. அந்தப் படங்களுக்கு உதவும் நோக்கில், ‘ஹெச் 3 சினிமாஸ்’ நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles