நடனத்தில் விஜய் உடன் போட்டி போடுவேன் - நடிகர் இமான் அண்ணாச்சி

Thursday, January 25, 2018

சமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து, படமாகிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். அதில், சசிரேகா என்ற நடிகையுடன் இமான் அண்ணாச்சி நடனமாடி கலக்கியிருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் நடித்த அண்ணாச்சி முதல்முறையாக நடனமாடியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் இமான் கூறும்பொழுது, 

“எனக்குள் இப்படி ஒரு நடனத் திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். இந்த படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குநர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார். இனிவரும் படங்களில் விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது!” என்றார். 

- கிராபியென் ப்ளாக்

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles