விஜய் சேதுபதியின் விஸ்வரூப வளர்ச்சி!

Wednesday, January 24, 2018

7சி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்'. நடிகர்கள் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார் ஆறுமுக குமார். படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று, நடைபெற்றது. அப்போது இயக்குநர் பேசும்போது, 

 

“இந்த கதையின் மீதும், எங்கள் மீதும் நம்பிக்கை வைத்து ஃபைனான்ஸ் செய்திருக்கிறார்கள் அம்மே நாராயணா எண்டர்டெயின்மெண்ட். நான் இயல்பாக பழகுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதும் அதே மாதிரி பழகுவது  தான் ரொம்ப பெரிய விஷயம். தன் கதாபாத்திரத்தை எப்படி மெறுகேற்றி செய்வது என்ற எண்ணம் உடையவர். அது தான் அவரின் வெற்றிக்கும் முக்கிய காரணம். படத்தில் கௌதம் கார்த்திக்குக்கு ஜோடினு சொன்னா அது டேனியல் தான். ரொம்பவே ஜாலியான ஹீரோ. படத்தில் ஒவ்வொரு செட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டினுக்கு இசையமைக்க நல்ல ஸ்கோப் இருந்தது, அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். எல்லோரும் ரசிக்கும் ஒரு பொழுதுபோக்கு படமாக நிச்சயம் இருக்கும்!” என்றார்.

இந்த சந்திப்பில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன், எடிட்டர் கோவிந்தராஜ், பாடலாசிரியர் முத்தமிழ், திங்க் மியூசிக் சந்தோஷ், கூத்துபட்டறை முத்துகுமார், லைன் புரொட்யூசர் யோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles