சண்முக பாண்டியன் புகழ் பாடும் நடிகை!

Wednesday, January 24, 2018

பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா. அவர் தற்போது ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ள படம் ‘மதுரவீரன்’. நடிகர் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். படத்தில் நடித்துள்ளது பற்றி அவர் கூறும்போது, 

 

“நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை ‘மதுரவீரன்’ திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் முத்தையாவுக்கு நன்றி. அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர் அவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது.

சண்முகபாண்டியன் எளிமையானவர், மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதாரணமாக பழகுபவர். அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாக பேச எனக்கு உதவியவர் அவர் தான். என்னுடைய வாழ்கையில் மிகசிறந்த தருணம் விஜயகாந்த் அவர்களும் பிரேமலதா அவர்களும் படபிடிப்பு தளத்துக்கு வந்து என்னுடன் ஒரு மணி நேரம் பேசியது தான். வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத தருணம் அது!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles