பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகிறது ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’!

Tuesday, January 23, 2018

'7C's Entertainment Private Limited',  'Amme Narayana Entertainment' ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு நாயகிகளாக காயத்ரி, நிஹாரிகா நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் ஆறுமுக குமார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது.

 

 

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது. 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் போஸ்டரும் டீசரும் மிகப்பெரிய ஹிட்டாகி இப்படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles