விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகளில் ‘மோகினி’ மிரட்டும்!

Monday, January 22, 2018

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘மோகினி’. ஹாரர் படமான இதில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியுள்ளார் ஆர்.மாதேஷ். படம் குறித்து அவர் பேசும்போது, 

 

“என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது ‘மோகி’. இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர் பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. இப்படத்தில் கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. 

 

இப்படத்திலும் நிறைய விஷுவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இப்படம் உன்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. படத்தை பார்க்கும் அனைவரும் தங்களோடு இனைத்து கொள்ள முடியும். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதே போன்று படத்திற்கும் கிடைக்கும்’’ என்றார். 

 

- கிராபியென் ப்ளாக் 

 

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles