‘இனியா’வுக்கு நான்தான் காஸ்ட்யூமர்!

Thursday, January 18, 2018

‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படத்தில் நடித்துள்ள தாரா, நடிகை இனியாவின் தங்கை. தமிழ் சினிமாவுக்கு புது வரவு. பேச ஆரம்பித்தாலே அக்கா புராணம் பாடுகிறார். படத்தில் அவருக்கு மலைவாழ் பெண் வேடம்.

அதனால் ஒரே காஸ்ட்யூமில்தான் படம் முழுக்க வருகிறாராம். அவருக்கு ரொம்பவும் பிடித்தது எளிமையான ஆடைகள் தானாம். புடவை, சுடிதார் எல்லாம் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் மட்டுமே. “இனியாவுக்கு நான்தான் காஸ்ட்யூம் டிசைனர். இதையும் மறந்துடாம எழுதுங்க!” என்று, அன்பு கட்டளை இடுகிறார். 

உதவி இயக்குநர் நோட் பண்ணுங்கப்பா..!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles