பல மில்லியன் வியூஸை கடந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’!

Wednesday, January 17, 2018

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா நடிப்பில்  உருவாகியுள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. அண்மையில் 

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில்  நடந்தது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், படத்தின் டீசர் யூ டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது. 

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பிரபல தொலைக்காட்சி பெற்றுள்ளது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளதால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்!

வாவ்.. அப்போ படம் ஹாட்ரிக் வெற்றிதான்!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles