இருநாள் முதல்வர் பவர் ஸ்டார்!

Wednesday, January 17, 2018

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா நாயகியாகவும் அறிமுகமாகி உள்ளார்கள். படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியுள்ளார் ரசாக்.

படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் உள்ளிட்டோர் உடன் பவர் ஸ்டார் சீனிவாசனும்  நடித்துள்ளார். 

அண்மையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, விழாவில் கலகலப்பாக பேசி, எல்லோரையும் கவர்ந்தார் பவர் ஸ்டார். “நிஜ வாழ்க்கையில் நான் முதல்வராவேனா என்பது தெரியாது. ஆனால், இந்தப் படத்தில் இரண்டு நாட்கள் முதல்வராகவே வாழ்ந்தேன். ஏராளமான கார்கள், போலீஸ் படை என அதகளப்படுத்திவிட்டார் இயக்குநர் ரசாக்!” என்றார். அவரது பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது!

பவர் ஸ்டாரா.. கொக்கா!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles