பொங்கல் விருந்து  குலேபகாவலி!

Wednesday, January 17, 2018

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரித்துள்ள படம் ‘குலேபகாவலி’.  இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா ஜோடி நடித்துள்ளது. மேலும், ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில், ‘குலேபகாவலி’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. அதிலும் ‘குலேபா’ பாடல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் பெரும் ஹிட்டாகியுள்ளது. காமெடி த்ரில்லர் வகையை சேர்ந்த இப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ளது.

கலகல காமெடி விருந்துன்னு சொல்லுங்க!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles