மாறுபட்ட பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா!

Tuesday, January 9, 2018

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’. அண்மையில் இப்படத்தின் டீஸர், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில், நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் முற்றிலும் புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் சயீஷா சைகல், யோகி பாபு உள்ளிட்டோரும் உடன் நடிக்கின்றனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் கோகுல்.

படம் குறித்து இயக்குநர் பேசியபோது,

“படத்தின் டைட்டிலுக்காக டீஸர் வெளியிடப்பட்டது இது தான் முதன்முறை. ‘ஜுங்கா’ என்ற டைட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வைக்க எடுக்கப்பட்ட புதிய முயற்சி இது. விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த டீஸரில் அவரின் உடல்மொழி மற்றும் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவரும்!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles