‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் ப்ரோமோஷனல்  பாட்டுக்கு ஆடுகிறார் யுவன்ஷங்கர் ராஜா!

Tuesday, January 9, 2018

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது, அவர் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் புரமோஷனுக்காக தானே பாடிய ஒரு பாடலுக்கு, நடனம் ஆட உள்ளார்.

இது குறித்து இயக்குநர் தரணிதரன் கூறும்போது, 

“யுவனின் எனர்ஜி எல்லோருக்கும் தெரிந்ததே. தன் துள்ளலான இசையால் அதை நிரூபித்தவர் தான் அவர். யுவன், தன் ஆன்மாவில் இருந்து இசையமைத்த புரமோஷனல் பாடலுக்கு நடனமாட துடிப்பான, உற்சாகமான ஒருவர் தேவைப்பட்டார். ஒட்டுமொத்த குழுவும் யுவனை கேட்க, அவர் நீண்ட தயக்கத்துக்கு பிறகு ஒப்புக் கொண்டார். ஒரு நட்சத்திரம் நடனமாடுவது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது!” என்றார். 

வாசன் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகன் மெட்ரோ சிரிஷுக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles