சற்குணம் இயக்கத்தில் நடிகர் மாதவன்!

Monday, January 8, 2018

தமிழ் சினிமாவில் 'அலைபாயுதே' படம் மூலம் மணிரத்னம் மூலம் அறிமுகமானாலும், தனது நடிப்பாற்றலால் இந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்திருப்பவர் நடிகர் மாதவன். தற்போது, அவர் இயக்குநர் சற்குணம் இயக்கும், அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 

இந்தப் படத்தை 'ஆரஞ்சு மிட்டாய்', 'றெக்க' படங்களைத் தயாரித்த காமன்மேன் கணேஷ் தயாரிக்க இருக்கிறார். 'மஞ்சப்பை', நயன்தாராவின் 'டோரா' படங்களை, தன் பேனர் மூலம் தயாரித்த இயக்குநர் சற்குணம் இந்தப் படத்தை இயக்குவதோடு, இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். 

இதுபற்றி இயக்குநர் சற்குணம் பேசும்போது, 

“காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது இந்த படம். தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பார்ட் 2 மற்றும் ட்ராகுலா அண்டோல்டு படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சண்டைக்கலைஞர் க்ரே பரிட்ஜ் பணியாற்றுகிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் இயக்குநர் ரதிந்திரன் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். 

மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக உருவாகும் இந்த படத்தை குழந்தைகளுக்கான படமாகவும் உருவாக்குகிறோம். இது ஒரு குடும்பத்தோடு பார்க்ககூடிய பொழுதுபோக்கு படமாகும். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது" என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles