சர்வதேச தரத்துக்கு வந்துள்ளது 'டிக் டிக் டிக்' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் - இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்

Friday, January 5, 2018

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர். 

விழாவில் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் பேசும்போது, 

“இந்தப் படம் ஜனவரி 26 ஆம் தேதியன்று வெளியாகிறது. ஆனால் இந்த படத்திற்கான பேக்ரவுண்ட் ஸ்கோரை மல்டி டிராக்குடன் கிறிஸ்துமஸ் தினத்தன்றே இசையமைப்பாளர் இமான் கொடுத்துவிட்டார். இது தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம். இதனை சாத்தியப்படுத்தி நூறாவது படத்திலும் புரொபஷனலாக இருப்பதைக் கண்டு வாழ்த்துகிறேன். 

படத்தை ஆரம்பிக்கும்போது ஒரேயொரு டிபார்ட்மெண்ட் மீது மட்டும் சந்தேகம் இருந்தது. அது சாத்தியப்படுமா? என்று யோசித்தோம். அது இந்தப் படத்தினுடைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தான். அதை அஜாக்ஸ் மீடியா சாதித்துள்ளது. சர்வதேச தரத்துக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் வந்துள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியான பின், மும்பையில் உள்ள பலர் அஜாக்ஸ் நிறுவனத்தின் தொடர்பு எண்ணை கேட்டனர். நான் வழங்கினேன். சென்னையில் ஒரே இடத்தில் வைத்து, இருநூறுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு இயங்குகிறார்கள். அவர்களால் தான் இந்தப் படம் சாத்தியமானது!” என்றார்.

இவ்விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஜெயப்ரகாஷ், வின்சென்ட் அசோகன், நடிகைகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ், இசையமைப்பாளர் டி இமான், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். எஸ், படத்தொகுப்பாளர் ப்ரவீண் ராகவ், கலை இயக்குநர் எஸ் எஸ் மூர்த்தி, பாடலாசிரியர் மதன் கார்க்கி கலந்து கொண்டனர்.

மேலும், படத்தின் முழுமையான கிராபிக்ஸ் பணியை மேற்கொண்ட அஜாக்ஸ் மீடியா டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முத்துராஜன், தலைமை மேலாளர் சோம.ராமநாதன் (செயல்பாடுகள் மற்றும் விற்பனை), வி.எப்.எக்ஸ்.மேற்பார்வையாளர் அருண் ராஜ் மற்றும் சண்டை பயிற்சி இயக்குநர் மிராக்கில் மைக்கேல் ராஜ் என படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். டி.இமான் இசையமைக்கும் 100 ஆவது படம் ‘டிக் டிக் டிக்’ என்பது குறிப்பிடத்தக்கது. 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles