பாபா பாஸ்கர் நடனம் அமைத்த ‘செயல்’!    

Wednesday, January 3, 2018

சி.ஆர். கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்க, திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம் ‘செயல்’. படத்தில் ராஜன் தேஜேஸ்வர் நாயகனாக நடிக்க, நாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார்.

மேலும், ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா ஆகியோரும் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார். படத்தை ரவி அப்புலு இயக்குகிறார். இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர் ஆவார். 

படம் குறித்து இயக்குநர் கூறும்போது,  “இந்தப் படத்திற்காக கேரளாவில் பாபா பாஸ்கர் நடன அமைப்பில் “ நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா “ என்ற பாடல் காட்சியில் ராஜன் தேஜேஸ்வர், தருஷி இருவரும் பங்குபெற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சாலக்குடி, வாகமன் போன்ற அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமப்பட்டு இந்த பாடல் காட்சியை படமாக்கினோம். சென்னையில் “டே மாமா விட்டுத் தள்ளு.. இதுக்கேண்டா இவ்வளவு டல்லு” என்ற பாடல் காட்சியையும் படமாக்கி உள்ளோம்!” என்றார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles