காதல், காமெடி, ஆக்‌ஷன், திகில் கலந்த படமாக ‘பார்க்கத் தோனுதே’! 

Wednesday, January 3, 2018

வாசவி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக மாதவன் தயாரிக்கும் படம் ‘பார்க்கத் தோனுதே’. இந்த படத்தில் ஹர்ஷா நாயகனாக நடிக்க,  நாயகியாக சாரா நடிக்கிறார். மேலும், பாண்டு, அப்பு உள்ளிட்டோரும் உடன் நடிக்கிறார்கள். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஜெய் செந்தில்குமார். படம் குறித்து  இயக்குனரிடம் கேட்ட போது, 

“வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஹர்ஷாவும் அவனது நண்பர்களும் காமெடி செய்து கொண்டு, ஜாலியாக அந்த கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறவர்கள். அப்படிப் பட்ட ஹர்ஷா அதே கிராமத்தில்  இருக்கும் பெண் சாரா மீது காதல் கொள்கிறான். இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.

கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் சாராவுக்கு பேய் பிடித்துக் கொள்கிறது. அவள் மீதிருந்த பேய் விலகியதா? காதலர்கள் இணைந்தார்களா? என்பது தான் கதை. காதல் காமெடி ஆக்‌ஷன் திகில் கலந்த படமாக ‘பார்க்கத் தோனுதே’ உருவாகி உள்ளது. படப்பிடிப்பு கிருஷ்ணகிரி கொடைக்கானல் ஒகனேக்கல் போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாகும்!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles