அருள்நிதியின் நடிப்புக்கு சவால் விடும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’!

Wednesday, January 3, 2018

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ள படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. த்ரில்லர் வகை படமான இதில் நாயகனாக அருள்நிதி நடித்துள்ளார். படத்தை மாறன் இயக்கியுள்ளார். இப்படம் பற்றி மாறன் கூறும்போது, 

“முழுக்கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதையை  அமைத்துள்ளேன்.  கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்னையில் மாட்டிக் கொள்ள, அதை தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே திரைக்கதையின் முடிச்சு. படத்தின் ஹைலைட்டே திரைக்கதை தான்.

சரியான இடங்களில் திருப்பங்கள் அமைந்திருக்கும். ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் அனுபவமாக இருக்கும். மிகவும் சவாலான பாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். அவர், ஒரு நடிகராக முதிர்ச்சி அடைந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவருக்கும் மஹிமாவுக்குமான காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகுந்த உழைப்பை போட்டு சிறப்பாக இசையமைத்திருக்கிறார் சாம் சி.எஸ். தயாரிப்பாளர் டில்லி பாபுவின் முழு ஆதரவும், அவர் கொடுத்த சுதந்திரமும் தான் இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள்" என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles