ஜூலி உடன் ஜோடி சேருவது யார்?

Tuesday, January 2, 2018

தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி. பின்னர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமானார். அதிலிருந்து பிக்பாஸ் ஜூலி என அழைக்கப்படுகிறார். தற்போது தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாகவும் பணியாற்றுகிறார். இந்நிலையில் அவர், ஒரு படத்தில் நாயகியாக நடிக்க, ஒப்பந்தமாகியுள்ளார். 

இது குறித்து ஜூலி பேசும்போது, “இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இப்படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்!" என்றார். 

'கே செவன் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில், இயக்குநர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படுமாம். ஜூலி உடன் ஜோடி சேரும் அந்த நபர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம். ஆனால், “ ‘ஜூலியும் நான்கு பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த துரை சுதாகர் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்!” என்கிறது கோடம்பாக்கத்து கிளி!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles