முதல்கட்ட படப்பிடிப்பிலேயே அசத்திய ‘டாவு’ படக்குழு!

Tuesday, January 2, 2018

'Two Movie Buffs' நிறுவனம் தயாரிக்கும் படம் டாவு. கயல் சந்திரன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரேபோ நடிக்கிறார். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ராம் பாலா. இவர் ஏற்கனவே தில்லுக்கு துட்டு படம் மூலம், ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். 

'டாவு' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது, எடுத்த காட்சிகளை போட்டு பார்த்த பிறகு  'டாவு' அணி மிகுந்த சந்தோஷமடைந்துள்ளது. இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் ரகுநாதன் கூறும்போது,

“முதல் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்கள் அணியின் திட்டமிடலும் அதனை சிறப்பாக செயல்படுத்தும் விதமும் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை எடுத்துள்ள காட்சிகள் அனைத்துமே சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை மிகவும் எதிர்நோக்கியுள்ளேன்.

நாயகன் சந்திரனின் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படம் வரும் வாரங்களில் வெளியாக உள்ளது.  இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படமான 'பார்ட்டி' படத்திலும் சந்திரன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். 

'டாவு' படம் சந்தோஷ் தயாநிதியின் இசையில், தீபக்குமார் பாதி ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில், ரேமியன் கலை இயக்கத்தில் பிரபுவின் சண்டை இயக்கத்தில், அஜய் மற்றும் சதீஷின் நடன இயக்கத்தில் உருவாகி வருகிறது!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles