ஹீரோக்களை புரொடியூஸராக்கும்  டைரக்டரா பூபதி பாண்டியன்?

Tuesday, January 2, 2018

A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து, நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. படத்தை பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். விமலுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன்,  பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர்.

ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, இயக்குநர் பூபதி பாண்டியன் பேசும்போது, 

“எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருப்பதை பார்த்து பின்வாங்கிவிட்டார். அதன்பின் தான் விமல் இப்படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். எனக்கு ஒரு ராசி இருக்கிறது. என் இயக்கத்தில் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். அந்தவகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக பயணத்தை ஆரம்பித்துள்ளார். 

இசையமைப்பாளர் பிஜாய் ஜாக்ஸ், தெனாலி கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்படுவார். ஆனால் அது படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான். இந்தப்படத்தின் எடிட்டர் கோபியை நான் இயக்கிய ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின்போது உதவியாளராக சேர்த்துவிட்டேன். இன்று என் படத்துக்கே எடிட்டராக மாறி, எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார்!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles