சூர்யா உடன் நடிக்க சபதம் எடுத்த கீர்த்தி சுரேஷ்!

Tuesday, January 2, 2018

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம்  ‘தானா சேர்ந்த கூட்டம்’.  படத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஜோடி, நடித்துள்ளது. இந்தப் படத்தில் நடித்துள்ளது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, 

“பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது நான் சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன் ஒரு நாள் நாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது. எனக்கு மகிழ்ச்சி. 

எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் டைரக்டர், வசனத்தை சொல்வார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம். அப்படி நடிக்கும் போது அது சிறப்பாக இருக்கும். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. அனிருத் பாடல்கள் சிறப்பாக வந்து, மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது சந்தோஷமாகவுள்ளது! என்றார். 

இப்படம் பொங்கலில் வெளியாக உள்ளது. 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles