ஜெய்க்கு கை கொடுத்த பலூன்! 

Tuesday, January 2, 2018

'70mm Entertainment'  நிறுவனம் தயாரித்துள்ள படம் 'பலூன்'. இப்படத்தில்  இரட்டை பாத்திரங்களில் நடித்துள்ள ஜெய்க்கு  அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.  இப்படம் குறித்து ஜெய் பேசுகையில்,

“எனது முதல் திகில் படம் ‘பலூன்’. இதற்கு முன்பு நிறைய திகில் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை சுவாரஸ்யமானதாக இல்லாததால் மறுத்துவிட்டேன். இந்த 'பலூன்'  கதையை இயக்குநர் சினிஷ் என்னிடம் சொன்னபொழுது அது என்னை மிகவும் ஈர்த்தது. இந்த படத்தை யுவனின் இசை அடுத்த தளத்திற்கு கொண்டுபோயுள்ளது என்பதே உண்மை. இது ஒரு திகில் படமாக  மட்டும் இல்லாமல், காதல் , காமெடி என அனைத்து அம்சங்களும் அழகான கலவையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் எனது சினிமா வாழ்வில் ஒரு முக்கியமான படமாகும்” என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles