புதிய கின்னஸ் சாதனை படைத்த ‘விஷ்வகுரு’!

Thursday, April 5, 2018

ஏவிஏ ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் டாக்டர். ஏ.வி.அனுப் தயாரித்திருக்கும் படம் ‘விஷ்வகுரு’. இப்படத்தின் இயக்குநர் விஜேஷ் மணி புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப் பணிகள் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பித்தது முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.

இதனால் உலகிலேயே மிக வேகமாக எடுத்து, முடிக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையை ‘விஷ்வகுரு’ படைத்துள்ளது!

இந்தியாவில் மாபெரும் சமூகச்சீர்திருத்தங்களைக் கொண்டு வரக் காரணமாக இருந்தவரும், கேரளாவில் மதம், ஜாதிகளையெல்லாம் தாண்டி மாபெரும் சமூகச் சீர்திருத்தங்களை கொண்டுவந்து, ஆன்மீக சுதந்திரத்தையும் சமூக சமத்துவத்தையும் உருவாக்கிய ‘ஸ்ரீ நாராயண குரு’ அவர்களின் வாழ்க்கையைக் காட்டும் ‘பயோ பிக்’ பிரிவிலான திரைப்படமே ‘விஷ்வகுரு’.

மலையாள சினிமாவில் அனுபவமுள்ள ஏ.வி.அனுப், இப்படம் குறித்து பேசும்போது, ‘’இந்திய சினிமாவை உலகளாவிய சினிமாவில் குறிப்பிட்டு காட்டும் வகையில் ஒரு மைல்கல்லை எட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் உருவானதுதான் இப்படம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மணி நேரத்தில், மேடை நாடக நட்சத்திரங்களின் பங்களிப்புடன் இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம்!’’ என்றார்.

‘விஷ்வகுரு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மட்டுமின்றி, படத்தலைப்பு முன்பதிவு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள், சுவரொட்டிகளுக்கான வடிவமைப்பு, விளம்பரங்கள் மற்றும் தணிக்கை முதல் அனைத்துப் பணிகளும் மிகக் குறைவான மணி நேரங்களுக்காகவே முடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles