மோகன்லால் நடித்த ‘ஒடியன்’ படத்துக்கு இசையமைத்துள்ளார் சாம் சிஎஸ்!

Thursday, April 5, 2018

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்துக்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் கேரளாவில் தன் பயணத்தை தொடங்க இருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இதுபற்றி அவர் பேசும்போது, 

“கோலிவுட்டில் ‘விக்ரம் வேதா’ ரிலீஸுக்கு பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. குறிப்பிட்ட வரையறைக்குள் நின்று விடாமல் ஒட்டு மொத்த படத்துக்கும் என்னால் இசையமைக்க முடியும் என தீவிரமாக நம்புபவன் நான். ஆனால் மோகன்லால் சாரின் ‘ஒடியன்’ படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக அமைந்திருந்தது. 

ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் ஒரு திரில்லர் கதை என்பதை கேள்விப்பட்ட உடனே கேரளாவின் பழங்கால புராதான இசைக்கருவிகளை உபயோகிக்கலாம் என்ற யோசனை தோன்றியது. வழக்கமாக மூங்கில் இசைக்கருவி என்றால் அது ஃப்ளூட் தான். ஆனால் 6 அடி நீளம் மூங்கில் இசைக்கருவி ஒன்று அழகான வசியத்துக்காக பயன்படுகிறது. அதை இசைக்க தெரிந்த வயதான பெண் ஒருவரை வைத்து இசைத்து, படத்துக்கு பயன்படுத்திக் கொண்டோம்!" என்றார். 

‘கரு’, ‘கொரில்லா’, ‘அடங்க மறு’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘வஞ்சகர் உலகம்’ உள்ளிட்ட படங்களால் தமிழ் திரை உலகின் இன்றியமையாத இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார் சாம்!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles