'கம்மரசம்பவம்' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு மகிழ்ச்சி! - நடிகர் பாபிசிம்ஹா

Thursday, April 5, 2018

தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி உள்ள மலையாள படம் ‘கம்மரசம்பவம்’. இந்த படத்தில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார். படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அவர். இன்று இப்படம் வெளியாகி, டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது,

"என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய கூற முடியாது. ஆனால் என்னுடைய கேரியரில் இதுவரை நான் பார்க்காத ஒரு கதாபாத்திரம் . ‘கம்மரசம்பவம்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தான் வருங்காலமாக இருக்க போகிறது. சில நேரங்களில் என்னால் திரையரங்கில் படத்தை பார்க்க முடியாதபோது, பின்னர் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் சட்டத்திற்குட்பட்டு பார்க்க முடிகிறது. சினிமா டிக்கெட், பாப்கார்ன் விலையை கணக்கில் கொண்டால், நிச்சயமாக வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்" என்றார்.

‘சாமி 2’ உட்பட மிகவும் எதிர்பார்க்கப்படும் பல  படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பாபி சிம்ஹா. மாறுபட்ட தோற்றங்களில் தோன்றுவதால் அவர் நடிக்கும் காட்சிகளை எடுக்க கால தாமதமாகிறது. ‘வல்லவனுக்கு வல்லவன்’ படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது. அவரின் புதுப்படத்தை பற்றிய அறிவிப்பை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட இருக்கிறார். சினிமாவை தவிர்த்து வெப் சீரீஸ் நடித்திருக்கிறார். வெப் சீரீஸ் புதுமையான கதை அம்சங்களோடு சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்கிறது கோலிவுட் பட்சி!

 - கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles