புட்பாலோடு புது களத்துக்கு தயாராகும் சுசீந்திரன்!

Wednesday, April 4, 2018

இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக ரோஷன் நடிக்கிறார். கதாநாயகனின் இளம் பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார்.

இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய “ஆதலால் காதல் செய்வீர்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 

இந்தப் படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவோடு சுசீந்திரன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படத்தில் நடிக்க நிஜ கால் பந்தாட்டக்காரர்களை இயக்குநர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் அப்டேட்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles