நம்பர் ஒன் இடத்தை பிடித்த ‘கோலிசோடா 2’ பாடல்!

Wednesday, April 4, 2018

ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பரத் சீனி தயாரித்திருக்கும் படம் ‘கோலிசோடா 2’. இந்தப் படத்தில் சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, க்ரிஷா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டன் சிவா உட்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருகிறது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். விஜய் மில்டன் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொண்டாட்டி’ பாடல் ப்ளே லிஸ்டில் திரும்ப திரும்ப கேட்கும் பாடலாக அமைந்துள்ளது. குறுகிய காலத்திலேயே தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்த பாடலே படத்தின் எதிர்பார்ப்புக்கு பதிலாக அமைந்துள்ளது. 

இது பற்றி விஜய் மில்டன் பேசும்போது, 

"ஜாலியான, துள்ளலான ரசிக்ககூடிய பாடலாக உருவாக்குவது தான் எங்கள் ஐடியா. எங்கள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறி இருக்கிறது.இசையமைப்பாளர் அச்சு பாடலின் தேவையை எளிதாக உணர்ந்து கொண்டு, இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சிறந்த பாடலை வழங்கக் கூடியவர். மணி அமுதவன் எளிதான, அனைவரையும் சென்றடையக் கூடிய பாடல் வரிகளை வழக்கம் போலவே வழங்கியுள்ளார். இந்த காலகட்டத்தில் லிரிக் வீடியோ எனப்படும் பாடல் வரிகளை கொண்டு வெளியாகும் வீடியோக்களே படத்தை கொண்டு சேர்க்க பயன்படும் ஒரு கருவியாக பயன்படுகின்றன. பாடலை அலங்கரித்து எல்லா வகையிலும் கொண்டு சேர்த்த திங்க் மியூசிக் நிறுவனத்துக்கு நன்றி!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles