தெலுங்கில் கால்பதிக்கும் இசையமைப்பாளர்!

Monday, April 2, 2018

செவிக்கு இனிமையான மெலோடி பாடல்கள் காலத்தையும் தாண்டி  ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே. தொடர்ந்து  மெலோடியான பாடல்கள்  மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அந்த வகையை சேர்ந்தவர்.

பிண்ணனி  இசை கோர்பிலும்  சோபிக்க கூடியவர் என்பதால் அவருக்கு மவுசு கூடி  வருகிறது. தற்போது அவர் தெலுங்கில் கூட  அறிமுகமாகிறார் என்பது கூடுதல் தகவல்.

இது பற்றி ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, 

“நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் "அர்ஜுன் ரெட்டி" புகழ் விஜய் தேவரகொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே " மரோ பிரபஞ்சம்", என்ற குறும் படத்தில்  பணியாற்றினோம். இப்போது அந்த திரை படத்துக்கான இசை கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு  பற்றிய முறையான தகவல் வரும். 

தமிழில் சசிகுமார் நடிக்கும் "நாடோடிகள் 2", அதர்வா நடிக்கும் ‘ஒத்தைக்கு ஒத்த’, எஸ் ஜே சூர்யாவின் பெயரிடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் கைவசம் இருக்கிறது. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகமாகி விட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை!" என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles