‘பொட்டு’ பயங்கரமான ஹாரர் படம் - இயக்குநர் வடிவுடையான்

Thursday, September 28, 2017

“திகில் படத்தை எப்படியெல்லாம் எடுக்கணும், எடுக்கக்கூடாதுன்னு ‘சவுகார்பேட்டை’ படத்துலதான் கத்துக்கிட்டேன். அப்படியாக வேறொரு பரிணாமத்தில் அழுத்தமான கதையமைப்பில் உருவாக்கியுள்ள படம் தான் ‘பொட்டு’.

நிச்சயம், ஹாரர் ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்தாக அமையும்..” ஓபனீங்கிலேயே வேகமும் விறுவிறுப்பும் காட்டுகிறார் இயக்குநர் வடிவுடையான். கோலிவுட்டில் மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் இடத்தை நிரப்பி வரும் டைரக்டர்.. தொடர்ந்து பேசும்போது,

“திகில் படத்தை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலமாக மக்கள் மத்தியில அழுத்தமாக சொல்ல முடியும் என நான் உணர்ந்த படம் தான்  ‘பொட்டு’. பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. நடிகர் பரத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் படமாக ‘பொட்டு’ இருக்கும் என உறுதியாக சொல்ல முடியும். தன்னுடைய பாத்திரத்துக்கு அவர் தந்துள்ள உழைப்பும் அர்ப்பணிப்பும் ரசிகர்களால் நிச்சயம் உணர  முடியும்!

கதையை, முழுக்க இரவில் நடக்கிற மாதிரிதான் அமைத்திருக்கேன். அதனை விஷுவலாக எடுத்துட்டு வருவதற்கு ஒளிப்பதிவாளர் இனியன் ஹரீஷ் கடுமையாக உழைத்திருக்கார். ஒவ்வொரு காட்சிகளை பார்க்கும்பொழுது பார்வையாளர்களுக்கு பிரமிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது. திகில் காட்சிகள், ஆடியன்ஸ் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். பொட்டு பயங்கரமான ஹாரர் படம் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை!.

ஆக்ஷன் படமான ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ எப்படி வித்தியாசமாக இருந்ததோ, அதேபோல் திகில் படங்களில் ‘பொட்டு’ மாறுபட்டு  இருக்கும். சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்புராயன் மாஸ்டர் தான்  அமைச்சிருக்காரு. சில காட்சிகளில் அவரே கீழே குதித்து, பைட் பண்ணியிருக்கார். இந்த வயதிலும் அவருடைய அர்ப்பணிப்பை பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது!

இசையமைப்பாளர் அம்ரீஷுக்கு இதுதான் முதல் ஹாரர் படம். பிளாஷ்பேக் காட்சிககளில் அவருடைய பின்னணி இசை பிரமாதமாக இருக்கும். மொத்த படத்துலயும் திகில் காட்சிகளில் பூந்து விளையாடி இருக்காரு மனுஷன்!. மொத்தத்தில் தமிழ் சினிமாவில் எங்க படக்குழு அனைவருக்குமே பேர் சொல்கிற, அடையாளமான படமாக ‘பொட்டு’ இருக்கும்!” பொட்டில் அடித்தாற்போல நச்சென்று முடிக்கிறார் இயக்குநர் வடிவுடையான்.

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles