சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தேன்- நடிகை இனியா

Thursday, September 28, 2017

கோலிவுட்டில் டப்பிங் தேவைப்படாத நடிகை இனியா. தமிழ் அவரிடம் கொஞ்சி விளையாடும். தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்கும் நடிகைகளில் அவரும் முக்கியமானவர். ‘பொட்டு’ படத்தில் மாறுபட்ட பாத்திரத்தில் அசத்தியுள்ளவர் பேசும்போது..

“எனக்கு பல படிப்பினைகளை கொடுத்த படம் ‘பொட்டு’. டைட்டில் ரோல்ல நான் நடிக்கிற இரண்டாவது படமும் இதுதான். ஏற்கனவே திகில் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முக்கியமான காரணங்கள் இருக்கு. நான் நடிக்கும் படங்களில் என்னுடைய பாத்திரம் சவாலானதாக அமைக்கப்பட்டிருக்கான்னு பார்ப்பேன். ‘பொட்டு’ படத்திலும் அப்படியான காட்சிகள் நிறைய இருக்கு. கதையோட சேர்ந்து பயணிக்கும்படியான, முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்திருக்கேன். என்னுடைய பாத்திரத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போகிறமாதிரி பரத்தும் நடித்திருப்பது சந்தோஷம்!

பொதுவாக நடிப்பில் அழுகை, சிரிப்பு, காதல் உணர்வுகளை சுலபமாக வெளிப்படுத்தலாம். ஆனால் ஆக்ஷனுடன் சேர்த்து திகிலை வெளிப்படுத்தணும்னா ரொம்ப கஷ்டம். நான் ஏற்கனவே கற்று வைத்திருந்த மார்ஷியல் ஆர்ட்ஸ்தான் இந்தப் படத்தில் எனக்கு உதவியாக இருந்தது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்.

‘பொட்டு’வில் இடம்பெறும் இடுகாடு எல்லாம் செட் போடாமல் உண்மையாக அங்கேயே படம் பிடிக்கப்பட்டிருக்கு. அங்கே போகுறதுக்கு முன்னாடி, சில பிரார்த்தனைகளை செஞ்சுட்டுதான் போனோம். அப்படி செய்ததால் எங்களுக்கு எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கலை!

இயக்குநர் வடிவுடையான் ரொம்ப சுறுசுறுப்பானவரு. என்னுடைய சினிமா பயணத்தில் இவ்ளோ சீக்கிரம் ஒரு படத்தில் நடித்து, முடித்தில்லை. ஷுட்டிங் ஸ்பாட்டில் அவர் எப்படி நடித்து, காட்டுகிறாரோ அதை மட்டும் செய்தால் போதும். நம்முடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைஞ்சுடும். நீண்ட நாளைக்கு பிறகு தமிழில் என் நடிப்பில் வெளிவரப்போகும் படம் ‘பொட்டு’. எல்லோரும் தியேட்டரில் வந்து படம் பார்த்துட்டு சப்போர்ட் பண்ணுங்க!” கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுக்கிறார் இனியா!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles