'பாரிஸ் பாரிஸ்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது பாலிவுட் ‘குயின்’!

Monday, September 25, 2017

‘மீடியன்ட்’ மனு குமாரன் மற்றும் “லைகர்” மனோஜ் கேசவன் இணைந்து  தயாரிக்கும் படம் ‘பாரிஸ் பாரிஸ்’. படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும்  நாயகனாக சஷி வருணும் நடிக்கின்றனர்.

ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்து “குயின்” என்ற பெயரில் வெளியாகி, வெற்றி பெற்ற படமே, தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. 

இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சத்யா ஹெக்டே கவனிக்கிறார். கலையை குணா கென்னெடிக்கும், வசனங்கள் மற்றும் பாடல்களை தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் வழங்கியுள்ளார் இயக்குநர். பங்கஜ் கபூருடன் இணைந்து கதை, திரைக்கதையை கவனிக்கிறார் ரமேஷ் அரவிந்த். முதல் முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னக மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வரும் இப்படம், ஒரே சமயத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பாலிவுட்டில் 12.5 கோடி பட்ஜெட்டில் தயாரான “குயின்”, வசூலில் 97 கோடிகளைக் குவித்துச் சாதனை படைத்தது. சிறந்த படம், சிறந்த நடிகை உள்ளிட்ட இரண்டு தேசிய விருது உட்பட 32 விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 - கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles